மக்களவையில் ஆவேசமான தயாநிதி மாறன்; இணையத்தில் வைரலாகும் வீடியோ…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் போது, மக்களவையில் நடந்த விவாதத்தில், குறுக்கிட்டுப் பேசிய பாஜகவினரைப் பார்த்து திமுக எம்பி தயாநிதி மாறன் ஆவேசமாக பேசினார்.  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் போது, மக்களவையில் நடந்த விவாதத்தில், குறுக்கிட்டுப் பேசிய பாஜகவினரைப் பார்த்து திமுக எம்பி தயாநிதி மாறன் ஆவேசமாக பேசினார். 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் வருகிறது. 19ம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவல் பணியாக, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.

இந்த மசோதா குறித்த விவாத்தின் போது காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறி காங்கிரஸ் எம்பி சோனியாகாந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதன் பிறகு திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அந்த சமயம் பாஜக எம்பிக்கள் ஹிந்தியில் கூச்சலிட்டனர்.அப்போது, கனிமொழி எம்பி, இந்தியில் கூச்சலிட்டால்  புரியாது என தமிழில் பதில் கூறி மீண்டும் பேசினார்.

இந்த நிலையில், மக்களவையில் திமுக எம்பி ஆ.ராசா இன்று உரையாற்ற எழுந்தார். அப்போது அவரைப் பார்த்து பாஜக எம்பிக்கள் பேசவிடாமல் கோஷமிட்டனர். இதனைப் பார்த்த ஆ.ராசாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு திமுக எம்பியான தயாநிதி மாறன் ஆவேசமாக எழுந்து, பாஜகவினரைப் பார்த்து திட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.