அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா – திருமாவளவன் பங்கேற்கவில்லை?

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. விகடன் நிறுவனம் வரும் டிசம்பர் 6ம் தேதி நடத்த இருக்கும் ‘எல்லோருக்கும் மன தலைவர் அம்பேத்கர்’…

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

விகடன் நிறுவனம் வரும் டிசம்பர் 6ம் தேதி நடத்த இருக்கும் ‘எல்லோருக்கும் மன தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், இந்த நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துக்கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : சென்னையில் ‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி – படக்குழு அறிவிப்பு!

தவெக தலைவர் விஜயுடன் ஓரே மேடையை பகிர்ந்துகொண்டால், திமுக கூட்டணியில் தேவையற்ற குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பும் என்பதால் திருமாவளவன் இந்த நூல் வெளியீட்டு விழாவை  தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.