ஸ்ரீபிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா! கும்மியடித்து குலவையிட்டு அம்மனை தரிசித்த பக்தர்கள்!

ஆலங்குடி அருகே வராப்பூர் புலவன்காடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாரைவளர் வாராப்பூர்…

ஆலங்குடி அருகே வராப்பூர் புலவன்காடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிடாரியம்மன் கோயிலில் மது எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாரைவளர் வாராப்பூர் நாட்டைச் சேர்ந்த புலவன்காடு கிராமத்தில் ஸ்ரீ பிடாரி அம்மன் அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்று வந்தது.
புலவன்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராமத்து பெண்கள் நல்ல மழை பொழிவு வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும், ஏழு நாட்கள் விரதம் இருந்து புதிதாக முளைவிட்ட தென்னம்பாளையை வெட்டி நெல் நிரப்பிய குடத்தின் மீது வைத்து, அந்த குடத்தை மலர்களால்அலங்கரித்து ஊர்வலமாகச் சுமந்து வந்து, கோவில் வளாகத்தில் கொட்டி அம்மனை வழிபட்டனர்.
இந்த ஊர்வலத்தின் போது பாரம்பரிய முறைப்படி பெண்கள் கும்மியடித்தும் குலவையிட்டும் உற்சாகமாக அம்மனை தரிசித்தனர். இந்த திருவிழாவில், வாராப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள், அம்மனை தரிசித்து அருள் பெற்று சென்றனர்.
—-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.