60 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட GOD எனும் பெயருடைய ட்விட்டர் கணக்கை எலான் மஸ்க் முடக்கியுள்ளார்.
புதிய அறிவிப்புகள் , புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் புதிய புதிய சர்ச்சைகளில் சிக்குபவர் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா என பல நிறுவனங்களை கையில் வைத்துள்ள எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டரை விலைக்கு வாங்கினார்.
பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆள் குறைப்பு, புளூ டிக்கிற்கு பணம் செலுத்துதல், ஒரே இரவில் பணி நீக்கம் என டிவிட்டர் நிறுவனத்தையே ஆட்டம் காணச் செய்தார்.
அடுத்து என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என டிவிட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நாள்தோறும் அச்சத்துடனே பணியாற்றுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு எலான் மஸ்க் நூதனமான முறையில் தனது நிறுவனத்தில் பணி நீக்கத்தை மேற்கொண்டார்.
எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் பணி புரியும் தலைமை மேலாளர்களிடம் அவரவர் தங்களது குழுக்களிலிருக்கும் சிறந்த ஊழியர்களது பட்டியலை தயாரித்து சமர்பிக்க கூறினார். அதன்படி தலைமை மேலாளர்களும் பட்டியலை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
இதனையும் படியுங்கள்: ”புதுசா.. இன்னும் பெருசா..” – புதிய அறிக்கை குறித்த அப்டேட்டை வெளியிட்ட ஹிண்டன்பர்க்
இதன் பின்னர் அந்த பட்டியலில் இருந்த ஊழியர்களுக்கு உயர் பதவிக் கொடுத்த எலான் மஸ்க், அந்த பட்டியலை தயாரித்துக் கொடுத்த அனைத்து தலைமை நிர்வாகிகளையும் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் செலவை குறைக்க அதிக சம்பளம் வாங்கும் பழைய ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
இதேபோல தனக்கு பிடிக்காத அல்லது தன்னை விமர்சிக்கும் சில டிவிட்டர் கணக்குகளை தனது சொந்த கணக்கின் மூலம் அவ்வபோது எலான் மஸ்க் முடக்கி வருவது வழக்கம். இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் “GOD” எனும் பெயருடைய டிவிட்டர் கணக்களார்.
இந்த கணக்கு கிட்டத்தட்ட 60 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது. இந்த கணக்கை அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஜாவர்பாம் பயன்படுத்தி வருகிறார். கேலி, கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கும் பதிவுகளை இந்த கணக்கின் அவர் எழுதி வந்தார். இவர் எலான் மஸ்க் குறித்து கேலி கிண்டல்கள் கொண்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
இவர் கடந்த 2022 முதல் டிவிட்டரில் பதிவுகளை எழுதுவதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் டிவிட்டர் பயன்படுத்த தொடங்கியபோது டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ வான எலான் மஸ்க் தன்னை பிளாக் செய்தது தெரிய வந்தது.
https://twitter.com/TheTweetOfGod/status/1638113314495660032
எலான் மஸ்க் தன்னை பிளாக் செய்த ஸ்க்ரீன்ஷாட்டை பதிவிட்டு “ நான் திரும்பவும் டிவிட்டருக்கு வரவில்லை. ஆனால் உலகின் பணக்கார, பைத்தியம் பிடித்த மற்றும் சிறுமையான மனிதரான எலான் மஸ்க் எப்படிப்பட்டவர் என்பதை காட்டவே இதை பதிவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.







