வந்தவாசி மருதாடு கிராமத்தில் நடைபெற்ற அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டு களித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். இதற்கிடையே இந்தாண்டு அக்கி வசந்த விழா கடந்த மாதம் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் திரௌபதியம்மன் கோயில் முன்பாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களாக கட்டைக்கூத்து நாடக கலைஞர்களால் மகாபாரத நாடகம் தினமும் இரவு நேரத்தில் அரங்கேற்றி வந்தது.
இதற்கிடையே மகாபாரத இறுதியில் துரியோதனை பீமன் வதம் செய்து துரியோதனின் உதிரத்தை பஞ்சாலி கூந்தலில் தடவி கூந்தலை முடிக்கும் சாப நிறைவேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
இதில் துரியோதனை பீமன் வதம் செய்யும் படுகளம் நிகழ்வை மறுதாடு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
—-கோ. சிவசங்கரன்







