முக்கியச் செய்திகள் சினிமா

டிஜிட்டலில் உருவாகிறது எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’!

எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் நவீன Dolby Atmos ஒலியுடன் டிஜிட்டலில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில், எம்.ஜி.ஆர். நடித்து தயாரித்து, இயக்கிய படம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’1973 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில், மஞ்சுளா, லதா, சந்திரகலா, நாகேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ-70 பொருட்காட்சியிலும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளிலும் இந்தப் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தப் படம் ஏற்கனவே டிஜிட்டலில் உருவாகி இருந்தது. இப்போது, நவீன டால்பி அட்மாஸ் ஒலியுடன் டிஜிட்டலில் மெருகேற்றி, ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜ் மீண்டும் வெளியிடுகிறார்.

Advertisement:

Related posts

பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!

Vandhana

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Gayathri Venkatesan

கொரோனா கட்டணம் குறைப்பு: தமிழக அரசு!