வேலூர் அருகே வஞ்சியம்மன் ஆலய ஆடித்திருவிழாவை முன்னிட்டு வஞ்சியம்மனுக்கு 7.5 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்ப்ட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூரில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி மாத ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில், ஆடி 3-ஆவது வெள்ளியான நேற்று வஞ்சியம்மனுக்கு 500, 200, 100, 50, 20 ரூபாய் என 7.5 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.







