ஜெர்மனியில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023; இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!

  ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ல் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ல் ஜோதி சுரேகா வென்னம், பிரனீத்…

 

ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ல் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023ல் ஜோதி சுரேகா வென்னம், பிரனீத் கவுர் மற்றும் அதிதி கோபிசந்த் சுவாமி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தப் பிரிவிலும் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். தங்கப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி மெக்சிகோ அணியான டாப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் சியோன், ஆண்ட்ரியா பெசெரா ஜோடியை 235-229 என்ற பள்ளிக்கணக்கில் வீழ்த்தி மேடையில் முதலிடம் பிடித்தனர்.

தகுதிச் சுற்றின் அரையிறுதியில் 2-ம் நிலை இந்திய முத்தரப்பு அணி 220-216 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டி வரலாற்றில் இதற்கு முன் அதிகபட்சமாக இந்தியர்கள், ரீகர்வ் பிரிவு இறுதிச்சுற்றில் 4 முறையும், காம்பவுண்ட் பிரிவு இறுதிச்சுற்றில் 5 முறையும் வெற்றியை இழந்தது நினைவுகூரத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.