டெம்போ வாகனத்தில் வந்து பசுமாட்டை திருடி செல்லும் கும்பல்; வீடியோ வைரல்!

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆற்காடு சாலையில் நள்ளிரவில் டெம்போ வாகனத்தில் வந்த 5-பேர் கொண்ட கும்பல் பசுமாட்டினை வண்டியில் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில்…

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆற்காடு சாலையில் நள்ளிரவில் டெம்போ வாகனத்தில் வந்த 5-பேர் கொண்ட கும்பல் பசுமாட்டினை வண்டியில் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் சாலையில் மாடுகள் சுற்றித்
திரிந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இரவு நேரங்களில் பசுமாடுகள் திருடுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆற்காடு சாலை சி.எம்.சி மருத்துவமனை அருகே சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த பசுமாட்டை 3-பேர் கொண்ட வெளிமாநில கும்பல் டெம்போ வாகனத்தில் திருடிச் செல்கிறனர்.

இந்த வீடியோ அருகே உள்ள கடையின் வெளியே நின்று இருந்த நபர் விடியோ எடுத்து
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இரவு நேரங்களில் மாடுகளை அவிழ்த்து விட வேண்டாம் என்பதும், அதேபோன்று
இரவு நேரங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மக்களின்
கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.