வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மரணம்; திரைத்துறையினர் இரங்கல்

வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார். மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி…

வெண்ணிலா கபடிக்குழு திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி’ சுந்தர் இன்று அதிகாலை
2.45 மணிக்கு உடல்நிலை குறைவால் காலமானார்.

மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி, கட்சிக்காரன் என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இவர் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து தனது சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு மாயி சுந்தர் காலமானார். அவருக்கு வயது 50. திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இவரின் மறைவிற்கு திரைநட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

இதற்கு முன்பு வெண்ணிலா கபடி குழு திரைப்படப் புகழ் நடிகர் ஹரி வைரவன் கடந்த 3ம் தேதி உடல்நல குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.