வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் விபத்து ஏற்படும் பகுதியில், விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்காக வள்ளியூர் பகுதிக்கு வருகை தந்த அவரிடம், வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் கேசவனேரி சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படுவதாகவும், அதனை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக
இதனைக் கேட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங், வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் கேசவனேரி சந்திப்பை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
– ம. ஸ்ரீ மரகதம்