போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி – மற்ற பெரும் கட்சிகள் அதிர்ச்சி

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயா கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி)  குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.  நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த…

போட்டியிட்ட முதல் தேர்தலிலேயா கவனம் ஈர்த்த திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி)  குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். 

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில்,  திரிபுராவில் பாஜக கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டிஎம்பி கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆட்சியமைக்க 31 இடங்களே போதுமான சூழலில் பாஜக கூட்டணி 33 இடங்களை பெற்றுள்ளது. இதன்மூலம் திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைகிறது.

ஆனால் வெற்றி பெற்ற பாஜகவை காட்டிலும் திரிபுராவில் முதன்முறையாகச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி) குறித்தே பலராலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. எந்தக் கட்சியும் சார்ந்திருக்காமல், தனித்து போட்டியிட்ட திப்ரா மோத்தா கட்சி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கட்சியாக மாறியிருக்கிறது. இந்தக் கட்சியின் தலைவர் அரச வாரிசான பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய டெப் பர்மா.

இதுவரை பிரத்யோத் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்றாலும், திரிபுராவின் திப்ரா மக்களுக்கான போராட்டங்கள், இயக்கங்களில் அவர் தீவிரம் காட்டிவந்தார். ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவந்தார். அதையடுத்து திரிபுரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் தலைமை நியமித்தது.

ஆனால், பிரத்யோத் சில மாதங்களிலேயே காங்கிரஸ் மேலிடம் ஊழல்வாதிகளுக்கு இடமளிக்க அழுத்தம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டி ராஜினாமா செய்தார். அதையடுத்து 2019-ல் திப்ரா மோத்தா கட்சியை தொடங்கி எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவதாக அதன் தலைவர் அறிவித்தார். புதிதாக  தொடங்கப்பட்ட கட்சிதானே,ஒன்றும் பெரியதாக வாக்குகள் வரப்போவதில்லை என பலரால் கணிக்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது, காங்கிரஸ்கட்ச்சிக்கு டிஎம்பி கட்சி கடுமையான போட்டியை ஏற்படுத்தி பலரின் கவனத்தை ஈர்க்கத்தொடங்கியது.

இந்நிலையில், தற்போது தேர்தல் வெற்றியைக் கண்டுள்ள பா.ஜ.க விற்கு பெரும்பான்மை  இருந்தாலும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயா 10 தொகுதிகளுக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று, போட்டியிட்ட மற்ற கட்சிகளுக்கு திப்ரா மோத்தா கட்சி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.