பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர், அருள்மிகு கள்ளி வனத்தாயி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா திருவீதி உலா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கள்ளி
வனத்தாயி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் மாசி திருவிழா
காப்பு கட்டுதலுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இதனை தொடர்ந்து, பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
இன்றைய விழாவில் , அருள்மிகு கள்ளி வனத்தாயி அம்மனுக்க மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, திருத்தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா மேளதாளம் முழங்க நடை பெற்றது. இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை
தரிசனம் செய்தனர்.
கு.பாலமுருகன்
BKT-ARY-PBR 02.03.2023 MNALLUR KALLIVANTHAYE KOVIL THIRUVIZA







