முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வந்தது வலிமை அப்டேட் – ‘POWER IS A STATE OF MIND’

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு, அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் வெளியானது. பிங்க் எனும் இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இத்திரைப்படம், அஜித்தின் வழக்கமான கமர்சியல் பாணியில் இருந்து விலகி, அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் பெரும் ஹிட் அடித்த நிலையில், அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் அடுத்த திரைப்படத்திற்கு கைகோர்த்தது. அஜித்தின் 60-வது திரைப்படமான இப்படத்திற்கு “வலிமை” என பெயரிடப்பட்டுள்ளதாக, 2019 அக்டோபர் 18-ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதுதான், இத்திரைப்படம் குறித்து படக்குழுவினர் அஜித் ரசிகர்களுக்கு கொடுத்த கடைசி அப்டேட். அதன் பின்னர், கிட்டதட்ட 632 நாட்களாக படத்தின் அப்டேட் கிடைக்காமல் அஜித் ரசிகர்கள் தவித்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல், அஜித் ரசிகர்கள் செல்லுமிடமெல்லாம் அப்டேட் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பதே உண்மை. உள்ளூர் முதல் வெளியூர் வரை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரது ஆன்லைன் போஸ்டுக்கு கீழும் வலிமை அப்டேட் கேட்டு, ஒரு அஜித் ரசிகரின் போஸ்ட் கண்டிபாக இருக்கும். இவ்வளவு ஏன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனிடம், ட்விட்டரில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு, நான் வெற்றி பெற்ற உடன் வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி, என அவர் பதிலளித்த நிகழ்வெல்லாம் நடந்தது. யூரோ கால்பந்து ஆட்டத்தில் கூட வலிமை அப்டேட் கோரி ரசிகர்கள் பதாகை ஏந்தியது, இணையத்தில் வைரலானது. கண்டா வர சொல்லுங்க என அப்டேட்டை தேடித் திரிந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், இன்று (ஜுலை 11) வலிமையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியானது, அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது, என்றே கூறவேண்டும்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அஜித் பைக் ரேஸ் வீரராக காட்சியளிக்கிறார். 5 புகைப்படங்களுக்கு மேல் இடம்பெறும் இந்த போஸ்டரில் POWER IS A STATE OF MIND என்ற வாக்கியங்களுக்கு நடுவே, பவரான பார்வையோடு நம்மை கவர்கிறார் அஜித். ரவுடிகளுக்கு நடுவே மாஸ் ஆக ஒன்று, பைக் ஹெல்மெட்டுடன் ஒன்று, கண்ணாடியுடன் ஸ்டைலாக ஒன்று, என பல்வேறு வகையாக ரசிகர்களை கவரும் வகையில், இந்த மோஷன் போஸ்டர் அமைந்துள்ளது. மேலும், 4 தனி போஸ்டர்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கையில் குண்டு ஒன்றினை சங்கிலியில் கோர்த்து எடுத்து செல்வது போல் ஒரு போஸ்டரும், கண்ணாடி, டி ஷர்ட் ஆகியவையோடு தனக்கே உரித்தான ஸ்டைலான பாணியில் ஒரு போஸ்டர் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் அப்டேட் கிடைத்த மகிழ்ச்சியில், அஜித்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். நேர்கொண்ட பார்வையில் ஆக் ஷனை குறைத்திருந்த அஜித், “வலிமை” மூலம் மீண்டும் முழுநீள ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்கவுள்ளார் என்றே தெரிகிறது. “வலிமை” இந்தாண்டே ரிலீசாகும் என இன்று வெளியான போஸ்டர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு!

G SaravanaKumar

பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர முறையீடு!

Jayapriya

10, 12ம் வகுப்புகள் வினாத்தாள் வெளியீடு..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

G SaravanaKumar