பாலியல் வன்கொடுமை மிரட்டல்: டி.வி.நடிகை பரபரப்பு புகார்

முகம் தெரியாத சிலர், பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுப்பதாகவும் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றி இருப்ப தாகவும் டிவி நடிகை புகார் தெரிவித்துள்ளார் பிரபல வங்கமொழி நடிகை பிரதியுஷா பால்.…

முகம் தெரியாத சிலர், பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுப்பதாகவும் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றி இருப்ப தாகவும் டிவி நடிகை புகார் தெரிவித்துள்ளார்

பிரபல வங்கமொழி நடிகை பிரதியுஷா பால். டி.வி.தொடர்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் சிலர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். நடிகையின் புகைப்படங்கள் சிலவற்றை மார்பிங் செய்து ஆபாச இணைய தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் நடிகை பிரதியுஷா பால் புகார் கொடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, சமூக வலைதளம் மூலம் கடந்த ஒரு வருடமாக இந்த மிரட் டல் வருகிறது. பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கும் நபரை, நான் பிளாக் செய்தால், மறுநாள் வேறு ஐடியில் இருந்து வந்து அதே மிரட்டல் வேலையை செய்கிறார். ஆரம்பத்தில் நான் இதைக் கண்டு கொள்ளவில்லை.

அவர்கள் எனது புகைப்படங்களை மார்பிங் ஆபாச இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதோடு என் தாய் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளனர். இதனால் இப்போது சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

போலீசார், நடிகையின் புகார் பற்றி விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். நடிகை ஒருவர் இப்படி பகீர் புகார் ஒன்றைக் கூறியிருப்பது வங்கமொழி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.