செய்திகள்

ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் ‘வலிமை’ பட பாடல்

வலிமை படத்தின் முதல் பாடல் யூடியூப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் போனி கபூர் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் தொற்று பரவல் குறைந்தபின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவராததால், அஜித் ரசிகர்கள் பல இடங்களில் படம் குறித்த அப்டேட்டை கேட்டு வந்தனர். இதனிடையே கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக நேற்று நாங்க வேற மாரி என தொடங்கும் படத்தின் முதல் பாடலை இரவு 10.45 மணிக்கு படக்குழு வெளியிட்டது .இதுவரை பாடல் 45 லட்சம் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தின் பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

எல்.ரேணுகாதேவி

தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க மமதாவுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டில் புதிதாக 1,891 பேருக்கு கொரோனா

Gayathri Venkatesan