ஒலிம்பிக் அரையிறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி போராடி தோல்வி அடைந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. இதில் முதல் 3 நிமிடங்களிலேயே பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட இந்திய அணி வீரர்கள் ஹர்மன்ப்ரீத் சிங், மந்தீப் சிங் தலா 1 கோல் என 2 கோல்கள் அடிததனர். இதன்மூலம் முதல் 15 நிமிடங்களில் இந்திய அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது 15 நிமிட சுற்றில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்து 2 – 2 என ஆட்டத்தை சமன் செய்தது.
பின்னர் நடைபெற்ற 3வது 15 நிமிட சுற்றில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காமல் 2 – 2 2 என்ற புள்ளியில் சம நிலையில் இருந்தன. இதையடுத்து நடைபெற்ற இறுதி சுற்றில் அடுத்தடுத்து பெனாலிட்டி வாய்ப்பு கிடைத்ததால் 3 கோல்கள் அடித்தனர். இதன்மூலம் பெல்ஜியம் அணி 5 – 2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி நாளை மறுநாள் நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் விளையாடவுள்ளது.,








