முக்கியச் செய்திகள் தமிழகம்

நாளை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

திமுக ஆட்சி அமைத்த பின்னர் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டபேரவையில், தனது முதல் பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூடவுள்ளது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறைவாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்

தமிழக அரசியலை புரட்டிப் போட வந்திருக்கும் கட்சி மநீம: கமல்ஹாசன்

Ezhilarasan

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்!