திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!

ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அதிமுக என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.

இதனிடையே அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் தவெகவில் ஐக்கியமானார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்த வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை அளித்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார். வைத்திலிங்கம் இதுவரை 4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.