முக்கியச் செய்திகள் தமிழகம்

’பட்டுத் தெளிந்த பட்டறிவாளர்…’ கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தனிவாழ்வு, கலைவாழ்வு, பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர் என்று அவருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் புதிய போஸ்டர் இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. பின்னர், டீசர் ஒன்றையும் வெளியிட்டனர். இந்த போஸ்டரும் வீடியோவும் ரசிகர்களி டையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கவிஞர் வைரமுத்து அவரை வாழ்த்தி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், ’எம்.ஜி.ஆர் பற்றிக்கலைஞர் சொன்னதுபோல் கமல் பற்றி நானும் சொல்லலாம்: “என் நாற்பதாண்டுகால நண்பர்” தனிவாழ்வு கலைவாழ்வு பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர். வெற்றி தோல்வி அவரை என்செய்யும்? தலைகீழாய்ப் பிடித்தாலும் மேல்நோக்கி எரியும் தீச்சுடர். எரி சுடரே, எழு சுடரே!’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு: சிபிஎம் கண்டனம்

Jeba Arul Robinson

காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து

Ezhilarasan

மத்திய அரசை கண்டித்து தி.மு.க, கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

Ezhilarasan