தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது, மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோதுதான் சென்னை மாநகரில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக அமர்வார் என்றும் வைகோ கூறினார்.
இந்த பொது கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,போக்குவரத்து தொழிற்சங்க பொது செயலாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.