முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

கர்ணன் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் டீசர் வருகின்ற மார்ச் 23ம் தேதி வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தின் டீசர் வருகின்ற 23ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இத்திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தாணு தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் மூன்று பாடல்களான ’கண்டா வரச் சொல்லுங்கள்’, ’பண்டாரத்தி பூரணம் ’, ’தட்டான் தட்டான்’ வெளியாகிப் பல கோடி பார்வையாளர்கள் இதைக் கண்டு ரசித்துள்ளனர். கர்ணன் திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜின் முதல் திரைப்படம் ’பரியேறும் பெருமாள்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளைத் தோலுரிக்கும் வகையில் அமைந்தது. இதனால் இவர் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாக இருக்கும் கர்ணன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்துக்கு ஜீயர் கண்டனம்

Gayathri Venkatesan

ஊராட்சி மன்ற பெண் தலைவரை சாதியரீதியதாக திட்டியதாக அதிமுக பிரமுகர் மீது புகார்

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தொற்று எண்ணிக்கை

Gayathri Venkatesan