முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வைகை அணை நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையொட்டி, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணை இருக்கிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது, 66 அடியை எட்டியுள்ளது.

வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான முல்லைபெரியாறில் இருந்து வைகை அணைக்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 564 கன அடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 769 கன அடி வீதம் தண்ணீர் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது,

நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதையொட்டி, கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்

Vandhana

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி

Ezhilarasan

திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! – மு.க. ஸ்டாலின்

Nandhakumar