முக்கியச் செய்திகள் சினிமா

கமல், விஜய் சேதுபதி இணையும் ‘விக்ரம்’ -ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.

‘விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து கமல் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அதை பகிர்ந்து வருகின்றனர். இந்த போஸ்டரில் நடிகர் கமல், விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் வெறித்தனமான லுக்கில் இடம் பெறுகின்றனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“கைதி” படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திலேயே விஜய்யை வைத்து மாஸ்டர் படம் இயக்கி முன்னணி இயக்குநராக பரிநமித்து இருக்கிறார். இதனால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் ஆக்சிஜன் கையிருப்பு எவ்வளவு உள்ளது: மத்திய அரசு தகவல்!

எல்.ரேணுகாதேவி

முகக்கவசம் அணிய அறிவுறுத்திய மருத்துவர் மீது தாக்குதல்

Saravana Kumar

இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி

Jeba Arul Robinson