தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் தொடங்கி வைத்தார்.
முன்னதாக உறுதிமொழியினை ஏற்று கொண்ட வீரர்களுக்கும், காளைக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 12 காளைகளும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 9 மாடுபிடி குழுவும் பங்கேற்றன.
ஒவ்வொரு காளைக்கும், 9 வீரர்கள் என்ற கணக்கில், 25 நிமிடங்கள் போட்டி நடை பெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளை யின் உரிமையாளர் அனைவருக்கும் குக்கர், அயன்பாக்ஸ், அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்க பட்டன.
மேலும் போட்டியினை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்த போட்டியை காண பல ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்தனர். அனைவரும் கண்டு ரசித்த இப்போட்டி கோலாகலமாக நடை பெற்றது.
–ம.ஸ் மரகதம்








