முக்கியச் செய்திகள் தமிழகம்

நோய் தொற்றை தடுக்க விலங்குகளுக்கு தடுப்பூசி

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில் உலக உயிரியல் தினத்தை முன்னிட்டு நாகை கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுக்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் உலக உயிரியல் தினம் ஜூலை 6 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி உலக உயிரியல் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாமில் வீட்டு வளர்ப்பு செல்லப் பிராணிகளான நாய், ஆடு, பூனை, குதிரை, உள்ளிட்ட உயிரினங்களை அழைத்து வந்த உரிமையாளர்கள் இலவசமாக தடுப்பு ஊசியை செலுத்தி சென்றனர்.

முதுகெலும்பு உள்ள விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஜூனோசிஸ் என்ற தொற்று நோய் குறித்தும், தொற்று பரவுதலை தடுக்கும் முறைகள் குறித்தும் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், தடுப்பூசி செலுத்தினால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Advertisement:
SHARE

Related posts

பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு: விசிக தேர்தல் அறிக்கை

Gayathri Venkatesan

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Gayathri Venkatesan

டோக்கியோ ஒலிம்பிக்; பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி

Saravana Kumar