சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடல் டீசரை வெளியிட்ட யுவன்!

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில், சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடலின் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘U1 Records’ வழங்க, நடிகர் சிம்பு…

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடிப்பில், சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடலின் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ‘U1 Records’ வழங்க, நடிகர் சிம்பு பாடியுள்ள பாடல் ‘தப்பு பண்ணிட்டேன்’. அறிமுக இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு விக்னேஷ் ராமகிருஷ்ணன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். டாங்லி ஜம்போ இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YouTube சேனலில் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் பின்னணி குரலில் “நான் தப்பு பண்ணிட்டேன், அவளை தொலைச்சேன்” என்று தொடங்கும் இந்த பாடலின் டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் நாளை(ஜூலை 8) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.