நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

மே 1ம் தேதி முதல் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவேக்சின், கோவி ஷீல்ட், ஸ்புட்னிக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய…

மே 1ம் தேதி முதல் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவேக்சின், கோவி ஷீல்ட், ஸ்புட்னிக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டது. இதன் பின்னர் இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை உக்கிரமாகியுள்ள நிலையில் கொரோனா தொற்று தடுப்பூசி போடப்படுவதற்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும் என டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன. மேலும் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கபட்டது.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்கள் தங்களுடைய உற்பத்தியில் 50 சதவீதத்தை இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதி 50 சதவீதத்தை மாநில அரசுகள், மற்றும் வெளிச்சந்தையில் மருந்து உற்பத்தியாளர்கள் விற்பனை செய்யலாம் என்றும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,78,769 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.