செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் இக்கடிதத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக பிரதமருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றைய தினத்தில் கடிதம் எழுதினார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

‘உங்கள் கடிதத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தடுப்பூசிகள்தான் முக்கியம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இதை உணர்ந்ததால்தான் மத்திய அரசு தடுப்பூசி செலுத்த தடுப்பூசித் திருவிழாவை நடத்தியது. 12 கோடி டோஸ்கள் செலுத்தி சாதனையும் அரசு நிகழ்த்தியிருக்கிறது . ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் முறையாக கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை. இந்த ஆலோசனையானது அவர்களுக்குதான் நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் மூத்த கட்சித் தலைவர்கள் தடுப்பூசிகளுக்கு எதிராக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். ஆனால் யாருக்கும் தெரியாமல் அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில்தான் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை உங்கள் கட்சித் தலைவர்கள் பின்பற்றினால் வரலாறு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்’

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தேமுதிக தேர்தல் பிரச்சாரம் குறித்து பிரேமலதா விளக்கம்!

Niruban Chakkaaravarthi

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

Gayathri Venkatesan

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசம்- பாலச்சந்திரன்!