நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த மாதம் 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து மொத்தம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி 2-ம் கட்ட தடுப்பூசி முகாமும், 26-ம் தேதி மூன்றாம் கட்ட முகாமும் நடைபெற்றது. இந்நிலையில், 4-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், ஆயிரத்து 600 சிறப்பு முகாம்கள் அமைக்கப் பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றன. நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.







