மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் தொடர்கிறது புலியை பிடிக்கும் முயற்சி

கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்கும் முயற்சி, 10வது நாளாக இன்றும் தொடர்கிறது நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடி…

கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்கும் முயற்சி, 10வது நாளாக இன்றும் தொடர்கிறது

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 4 மனிதர்களை கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்காக மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன், வனத்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிப்பதற்காக கும்கி யானை மீது அமர்ந்து கால்நடை மருத்துவர்கள் வனப்பகுதி பயணித்தனர்.

இந்நிலையில் நேற்றும் புலியை பிடிக்கும் வனத்துறை முயற்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து புலியை பிடிக்கும் பணி 10வது நாளான இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், புலியை கண்டுபிடிக்கும் பணியில் உதவுவதற்காக கர்நாடக மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து ராணா என்னும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.