இன்று வெளியாகிறது ‘வாத்தி’: கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!!

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று காலை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கை தோரணங்கள் கட்டி, பேனர்களை வைத்து ஒரு திருவிழா கோலமாக அமைத்துள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ்…

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று காலை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கை தோரணங்கள் கட்டி, பேனர்களை வைத்து ஒரு திருவிழா கோலமாக அமைத்துள்ளனர்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் இன்று காலை 8 மணி அளவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி, திரையரங்கு முழுவதும் தோரணங்களை கட்டி, பேனர்களை வைத்து திரையரங்கினை ஒரு திருவிழா கோலமாக மாற்றி உள்ளனர்.

இதையும் படிக்கவும்: இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது 

வாத்தி திரைப்படத்தில் அமைந்துள்ள நடிகர் தனுஷ் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் 45 அடி பேனர் வைத்துள்ளனர். மேலும் தனுஷ் புகைப்படத்தை நட்சத்திர வடிவில் அலங்கரித்து திரையரங்கம் முழுவதும் அமைத்து ரசிகர்கள் அவர்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.திரையரங்கம் முன்பு வாழை மரங்களை கட்டியும், பலூன் மற்றும் கலர் காகிதங்களை கட்டியும், தனுஷ் ரசிகர் மன்றம் என்ற வசனங்களுடன் திரையரங்கை ஒரு திருவிழா கோலமாக அமைத்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியான துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியான போது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் அவதிக்குள்ளாயினர். மேலும் ரோகிணி திரையரங்கில் உள்ள முன்புற கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

அது போன்று இன்று அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க ரோகிணி திரையரங்கில் 20க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியிலும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.