33.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று காலை தொடங்குகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு ஏதுவாக அமைந்தது. இதில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் சுழல் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 91 ரன்னிலும் சுருண்டது.

முதல் இன்னிங்சில் கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் மற்றும் ஜடேஜா, அக்ஷர் பட்டேலின் அரைசதத்தால் 400 ரன்களை இந்தியா குவித்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி போன்றே இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். எஞ்சிய 3 டெஸ்டுகளில் குறைந்தது இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் எட்டிப்பிடிக்க முடியும். அதனால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, கே.எஸ்.பரத், அஸ்வின், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியில், வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, ரென்ஷா அல்லது டிராவிஸ் ஹெட், கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், டாட் மர்பி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading