கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!

உத்தரபிரதேசத்தில் பயிர்களை காக்க கரடி உடை போட்டு காவலுக்கு நிற்கும் ஆட்களை ரூ.250 – க்கு சம்பளத்துக்கு அமர்த்தும் விவசாயிகள். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி என்கிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதிகால டெக்னிகை…

உத்தரபிரதேசத்தில் பயிர்களை காக்க கரடி உடை போட்டு காவலுக்கு நிற்கும் ஆட்களை ரூ.250 – க்கு சம்பளத்துக்கு அமர்த்தும் விவசாயிகள்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி என்கிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதிகால டெக்னிகை பயன்படுத்தி தங்கள் பயிர்களை காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ரூ.5000 – க்கு கரடியில் உடையை வாங்கும் விவசாயிகள் அதை உடலில் அணிந்துகொண்டு விளைநிலங்களை காக்க ரூ.250 சம்பளம் தந்து ஆட்களை அமர்த்துகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சிவ் மிஸ்ரா என்கிற விவசாயி, கரடி உடை அணிந்து ஆட்களை காவலுக்கு அமர்த்துவது நன்கு வேலை செய்வதாகவும் இதனால் தற்போது குரங்கு போன்ற விலங்குகளில் தொந்தரவு குறைந்துள்ளதகவும் கூறியுள்ளார். ஆயினும் கரடி உடை அணிந்து ரோந்து வருவது கடினமான வேலைதான் என்றும், முழு உடலும் மூடப்பட்டிருப்பதால் அந்த உடையை அணிபவர் சற்று அசௌகரியத்துக்கு ஆளாவதாகவும் தெரிவித்தார்.

சம்பளத்துக்கு கரடி உடை அணியும் ராஜேஷ்குமார் என்பவர் நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் கரடி உடை அணிந்து விளைநிலங்களை காவல் காப்பதாக தெரிவிக்கிறார். தனக்கு அதிக சிரமம் ஏற்படும் போது தனது மனைவி கரடி உடையை அணிந்து ரோந்து செல்வார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், விளைநிலங்களில் குரங்கு தொல்லை அதிகமாகியுள்ளதை வனத்துறை அதிகாரிகளிடம் சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளாததால் தாங்கள் இப்படி ஆதிகால கரடி வேடமெல்லாம் போட வேண்டி உள்ளதாக கூறும் விவசாயிகள், இது குறித்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.