கடந்த 10 வருடங்களாக #ICC கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி அடைந்த ஏமாற்றங்கள்; விரிவாக அலசும் செய்தி தொகுப்பு…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வி கண்டதை அடுத்து, இந்திய அணி கடந்த 10 வருடங்களாக ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் அடைந்த ஏமாற்றங்கள் குறித்து விவரிக்கிறது இந்த…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வி கண்டதை அடுத்து, இந்திய அணி கடந்த 10 வருடங்களாக ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் அடைந்த ஏமாற்றங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023, சிலருக்கு மறக்கப்பட வேண்டிய ஒரு இறுதிப்போட்டியாகவும், பலருக்கு மறக்கமுடியாத போட்டியாகவும் பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கும், ஐசிசி கோப்பைகளுக்குமான ராசி என்பது 2013 க்கு பிறகு இன்னமும் எட்டாக்கணியாக மட்டுமே இருந்து வருகிறது.

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் டாஸ் முதல், அணியில் ஆடும் லெவன் வரை அடுத்தடுத்த விமர்சனங்களை சந்தித்தது மட்டுமல்லாமல், இந்திய அணியின் ஒவ்வொரு அடிகளும் அச்சாணி இல்லாத மாட்டு வண்டி போலவே ஓடியதாக பார்க்கப்பட்டது.

கேப்டன் தோனிக்கு பிறகு, இந்திய அணியை கேப்டன்சி செய்த விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா என இருவருக்கும் ஐசிசி கோப்பைகளுக்கான தாகம் இன்னுமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பருவநிலை மாற்றத்தை கணிக்காமல் ரோகித் சர்மாவின் டாஸ் டெசிஷனை குறை சொல்வதா? ஆடும் லெவனில் அஷ்வினை எடுக்காததை குறை சொல்வதா? டாப் ஆர்டர்களின் சொதப்பல்களை குறை சொல்வதா? அல்லது ரோகித் சர்மாவின் கேப்டன்சியை குறை சொல்வதா என்பது தெரியாமல், ஒட்டுமொத்தமாக திக்குமுக்காடிப் போய் நிற்கின்றனர் இந்திய ராசிகர்கள்.

இதுவரை மிக முக்கியமான தருனங்களில் இந்திய அணி ரசிகர்கள் சந்தித்த அப்சட்டுகளின் என்னிக்கை கடந்த பத்து ஆண்டுகளாக கூடிக்கொண்டே போகிறது என்று தான் சொல்லவேண்டும்.

குறிப்பாக 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியிடம் கண்ட தோல்வி,

2015 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் கண்ட தோல்வி,

2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடனான தோல்வி,

2017 சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் கண்ட தோல்வி,

2019 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் கண்ட தோல்வி,

2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் அத்தியாயத்தில் நியூசிலாந்து அணியிடம் கண்ட தோல்வி,

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் கண்ட தோல்வி என கடந்த 10 வருடங்களாக இந்திய அணிக்கும், ஐசிசி கோப்பைக்குமான வெற்றி வாய்ப்பு துளி அளவும் சாத்தியமில்லாத ஒன்றாக அமைந்துள்ளது..

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வி அடைந்து மீண்டும் ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது..

இந்திய அணியை பொருத்தவரை ஒவ்வொரு தொடரின் போதும் அதற்கான லீக் போட்டிகளை சாமர்த்தியாமாக வென்று முக்கியக் கட்டத்திற்குள் நுழையும் தருவாயில், தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் வெளியேறி வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் அல்டிமேட் டெஸ்ட் தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து இரண்டு முறை தகுதி பெற்றுள்ள இந்திய அணி, இரண்டு முறையும் மோசமான தோல்வியை கண்டுள்ளது மட்டுமல்லாமல், ஒரே காண்டினெண்டை சேர்ந்த ஆஸி மற்றும் நியூசி அணிகளிடையே தோல்வி பெற்றிருப்பது மேலும் இந்திய ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது..

இந்த தோல்வி குறித்த பல்வேறு விமர்சனங்களை அடுக்கடுக்காக வைத்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் காட்டமான வார்த்தைகள் தற்போது குழப்பத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

மேலும் 3 விதமான பார்மேட்களிலும் 3 ஐசிசி கோப்பைகளை கைப்பற்றியுள்ள மகேந்திர சிங் தோனியை பாராட்டி பேசிய அவர், ஐசிசியின் அனைத்துக் கோப்பைகளையும் வெல்வது அவ்வளவு எளிதல்ல, ஆனால் தோனி அதனை எளிமையாக செய்து காட்டியிருக்கிறார் எனவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் தொடர் போராட்டத்திற்கு மத்தியில், முற்றிலுமாக வைத்திருக்கும் நம்பிக்கை என்பது நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50ஓவர் உலகக் கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்பது மட்டுமே. ஆனால் இந்திய அணியின் சறுக்கல் மிகுந்த ஐசிசி கோப்பையின் பத்து ஆண்டு கால வரலாறு, நடப்பாண்டு கோப்பையை வென்று அனைத்து விமர்சனங்களையும் உடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.