செரீனா வில்லியம்ஸ் சாதனையை சமன் செய்து 23 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. . இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸுடன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதினார். விறுவிறுப்பான போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் அரையிறுதிப் போட்டியை வென்ற நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் பாரிசில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீரரான நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட் உடன் மோதிய ஜோகோவிச், முதல் செட்டை 7-6 என விளையாடி டை பிரேக்கரில் 7-1 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி முன்னிலை பெற்ற ஜோகோவிச், மூன்றாவது செட்டை 7-5 என கைப்பற்றி 3-0 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரெஞ்ச் ஓபன் 2023 டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றார் உலகின் மூன்றாம் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச். இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை முறியடித்து, அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார்.







