உத்தரபிரதேசம் : யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் படகோட்டி மற்றும் 9 பேர் பயணித்துள்ளனர். அப்போது அவர்கள் ரிவர் ஐலேண்ட் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய போது ஆற்றின் நடுவில் படகு வந்தபோது, இரவு 7 மணியளவில் திடீரென சமநிலையை இழந்து படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் படகோட்டி தீரு, போராடி 3 பேரை உயிருடன் மீட்டார். எனினும், மற்றவர்களை காணவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த படகு விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதனர். இதைத்தவிர, பிரிஜ்ராணி என்ற இளம்பெண்ணும் (வயது 25) விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த மீட்பு பணியின்போது கனமழை பெய்த நிலையிலும், அனைவருடைய உடலையும் மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.