உத்தரப்பிரதேசம்: ஹத்ராஸ் வழக்கில் 3 பேர் விடுதலை!

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின சமூகத்தை சார்ந்த 19 வயது…

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலின சமூகத்தை சார்ந்த 19 வயது இளம்பெண்ணை அவரது வீட்டிற்கு அருகில் 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

இதையும் படிக்கவும் : ஐபிஎல் 2023: சென்னையில் தீவிர பயிற்சியில் தோனி!

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கை அரசு சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ இந்த வழக்கை தனிக்குழு அமைத்து விசாரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்களான சந்தீப், லவ்குஷ், ரவி, ராம் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 4 பேர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை நிராகரித்ததோடு, 4 பேரில் சந்தீப் என்ற நபரை குற்றவாளி என அறிவித்து மரணத்தை விளைவிக்கும் வகையில் அப்பெண்ணை தாக்கியதற்காக ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும், மற்ற 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் இந்த தீர்ப்பு திருப்தி அளிக்காததால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.