நாமக்கல்லில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன்
குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு திடீரென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு
செய்தார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், ஒருங்கிணைந்த தொடு உணர்வு சிகிச்சை, சிறப்பு சிகிச்சை, இயன்முறை மருத்துவம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கிடம் கேட்டறிந்தார்.
மேலும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு இம்மையத்தின் மூலம், தேவையான
சிகிச்சைகள், உபகரணங்கள் ஆகியவற்றை, அரசு உடனுக்குடன் வழங்கி வருவதாகவும்,
மாற்றுத்திறன் குழந்தைகளின் நலனில் அரசு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு
வருகிறது , என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
—கு.பாலமுருகன்









