ஐபிஎல் 2023: சென்னையில் தீவிர பயிற்சியில் தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.

10 அணிகள் பங்கேற்கும் 16வது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் போட்டி வரும் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடக்கிறது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையடுத்து ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக சென்னை வந்த கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர்தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது.

அதன்படி தோனி இன்று பயிற்சியை தொடங்கினார். ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, சுப்ரன்ஷூ சேனாபதி உள்ளிட்ட வீரர்களும் பயிற்சியை தொடங்கினர். சென்னை அணியின் கேப்டன் தோனியை பார்க்க ஏராளாமான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.