58 கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரியும், 58 கால்வாய் தொட்டிப் பாலம் அருகே கல்குவாரி அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகளை கண்டித்தும், கால்வாய் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் விரைந்து கால்வாய் பராமரிப்பு பணிகளை முடித்து 58 கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாய சங்கத்தினர் கண்டன கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
– வெற்றிவேல்







