ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் ; 13 பேர் உயிரிழப்பு….!

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மீது அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் நடத்திய கூட்டுத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போரிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இதற்கிடையில் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் நரகத்தை காட்டுவோம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் பஹ்ரெஸ்தான் கவுண்டியில் அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இறந்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 6 குழுந்தைகளும் அடங்குவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.