ஆந்திர மாநிலம் ராயலசீமா, அதையொட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென்தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







