GOLD RATE | தங்கம் விலை உயர்வு – மாலை நிலவரம் என்ன…..?

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும் போது உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்திருந்தது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 140 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,810-க்கும், சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,10,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.255 -க்கும், கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,440 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,11,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து ரூ. 13,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.