யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு……….!

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களில் இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி இவர் பல்வேறு படங்களில் கதாநாயகனாவும் இவர் நடித்துள்ளார்.

அந்த வகையில் ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடித்துள்ளார். ஆர்.பி.டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தாயரித்துள்ள இந்த படத்தில் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சூழலில்  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை நாளை வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.