உ.பி. சிறைக் கைதிகளில் 24% பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

உத்தரப்பிரதேச மாநில சிறைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24% பேரும் ஓ.பி.சி பிரிவில் 45% பேரும் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சியாம் சிங் யாதவ் சிறைவாசிகள் நலத்திட்டங்கள் குறித்து எழுப்பிய…

உத்தரப்பிரதேச மாநில சிறைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24% பேரும் ஓ.பி.சி பிரிவில் 45% பேரும் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சியாம் சிங் யாதவ் சிறைவாசிகள் நலத்திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் பதில் அளித்தார். அப்போது, “உத்தரப்பிரதேச சிறைகளில் 2021ம் ஆண்டு வரை 90,606 பேர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். அவற்றில் 21,942 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

இதையும் படிக்க: இந்தியாவில் வாகனம், தொலைபேசி வசதி கூட இல்லாமல் இயங்கும் காவல்நிலையங்கள் – மத்திய அமைச்சர் சொன்ன தகவல்

4,657 பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். 41,678 பேர் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறையில் உள்ள வசதி, சட்டஉதவி போன்றவை குறித்து விழிப்புணர்வு செய்வதற்காக ‘மாதிரி சிறை கையேடு 2016’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.

இந்திய சிறைவாசிகள் குறித்த புள்ளி விவரங்கள் (2021) படி மொத்தமுள்ள 5,54,034 கைதிகளில் 4,27,165 (76%) பேர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். அதே ஆய்வு உ.பி சிறைகளில் அதிகளவு கூட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளது. 2021ம் ஆண்டில் சிறை கைதிகள் இருப்பு 130% உள்ளது. இதற்கு முன்பு அது 118% இருந்தது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.