Skip to content
December 22, 2025
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » police stations in india are running without vehicles and even telephone facilities the information given by the union minister
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வாகனம், தொலைபேசி வசதி கூட இல்லாமல் செயல்படும் காவல்நிலையங்கள் – எங்கே என தெரியுமா?

மக்களவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி அடிப்படை வசதிகளின்றி இந்தியாவில் இன்றளவும் பல காவல்நிலையங்கள் இயங்குவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில்…

Author Avatar

Web Editor

March 15, 202312:22 pm 285 have no mobile phones63 police stationsgovernment data submittedIndia have no vehiclelok sabhapolice stationUnion Home Minister Nityanand Rai

மக்களவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி அடிப்படை வசதிகளின்றி இந்தியாவில் இன்றளவும் பல காவல்நிலையங்கள் இயங்குவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முதல் கூட்ட தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி கூட்டத்தொடர் மார்ச் 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றம் தொடங்கிய உடனே லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசியதோடு, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்திருந்தார்.

இதனால் இந்த விவகாரம் தொடர் அமளிக்கு வழிவகுத்ததால் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கிபோது, ஆன்லைன் சூதாட்ட மசோதா, அதானி விவகாரம்,
ராகுல்காந்தி விவகாரம் குறித்து உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்திருந்தார்.

அதில், நாடு முழுவதும் 17,535 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றில் 63 காவல் நிலையங்களில் வாகன வசதியும், 628 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதியும், 285 காவல் நிலையங்களில் வயர்லெஸ் கருவி, கைப்பேசி வசதிகளும் இன்றளவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், நக்சல் தீவிரவாத அமைப்பினரின் வன்முறை தொடர்பான மற்றொரு கேள்விக்கு நித்யானந்த் ராய்
அளித்த பதிலில் கடந்த 12 ஆண்டுகளில் நக்சல்களின் வன்முறை 77 சதவிகிதம் அளவிற்கு குறைந்துவிட்டதாகவும், மேலும் நக்சல் தாக்குதல்களால் ஏற்படும் உயிரிழப்பு 90 சதவிகிதம் அளவிற்கு குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் ; திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…!

By Web Editor December 22, 2025

குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு…..!

By Web Editor December 22, 2025

ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த ’பராசக்தி ; ’ஜனநாயகனுடன்’ மோதல்…!

By Web Editor December 22, 2025

அரசு ஊழியர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ்…!

By Web Editor December 22, 2025
#ट्रेंडिंग हैशटैग:285 have no mobile phones63 police stationsgovernment data submittedIndia have no vehiclelok sabhapolice stationUnion Home Minister Nityanand Rai

Post navigation

Previous Previous post: “தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” படத்தில் நடித்த தம்பதியை அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Next Next post: கோவையில் மத்திய அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹரியானாவில் 4 பேர் கைது!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading