VOTE FROM HOME என்பது என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்?

இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் Vote from Home என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. VOTE FROM VOTE என்பது என்ன? இதனால் யாருக்கு பயன்? அதில் இருக்கும்…

இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் Vote from Home என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. VOTE FROM VOTE என்பது என்ன? இதனால் யாருக்கு பயன்? அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?.. என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

90 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்க கூடிய இந்தியாவில, மத்திய அரசையும், மாநில அரசுகளையும் தேர்வு செய்ய நடக்கும் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. தற்போது நடக்கும் எல்லா தேர்தல்களிலுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாகதான் இந்திய மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ”Vote from Home” அதாவது வீட்டியிருந்தே ஒட்டு போடும் ஒரு திட்டத்தை முதல்முறையாக கர்நாடக மாநிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது .

VOTE FROM HOME என்பது என்ன?

இந்த திட்டத்தின் படி, 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போட முடியும்.

இதற்காக 12D என்ற படிவம் பெற்று, இதனை பூர்த்தி செய்து, தங்களின் வாக்குப்பதிவை வீட்டில் இருந்தப்படியே இவர்கள் வாக்களிக்கலாம் என கூறப்படுது.

இதே போன்று, மாற்றுத்திறனாளிகளுக்காக ‘சாக்ஷம்’ என்ற மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் எந்த வகையில், ஓட்டளிக்கலாம் என முடிவு செய்து கொள்ளலாம்.

எதற்காக இந்த முறை?

கர்நாடகாவை பொறுத்தவரை அங்கே இருக்கும்  80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளிகள் 5.55 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி உடையவர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் சமயங்களில வாக்குப்பதிவு மையத்திற்கு வர முடியாமல் இருக்கும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் தங்கள் வீட்டியிலிருந்தே ஓட்டு போடுவதற்காக இந்த திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.

திட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்?

VOTE FROM HOME என்ற திட்டத்தால் ஒருபுறம் முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் நன்மையடைந்தாலும், மறுபுறம் இந்தத் திட்டத்தால், முதியோர், மாற்றுத்திறனாளிகளின் ஓட்டுகளைக் குறிப்பிட்ட ஒரு கட்சியினர் தங்களுக்குச் சாதகமான ஓட்டுகளாக மாற்ற, அதிக வாய்ப்புள்ளதாக  எதிர்கட்சிகள்  குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, Vote from Home’ திட்டம் குறித்து இதுவரை எந்த கருத்துக் கேட்பும் நடத்தாமல், அதை நேரடியாக அமல்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், ஏதாவது ஒரு தொகுதியில் Trial பார்த்து, வல்லுநர்கள் குழு அமைத்து ஆலோசித்து, அதன் பிறகுதான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

சிக்கல்கள் கலையப்படுமா?

சமீபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய ரிமோட் வாக்குப்பதிவு முறைக்கு காங்கிரஸ் உள்பட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது VOTE FROM HOME என்ற முறையும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக ரிமோட் வோட்டிங், VOTE FROM HOME போன்றவைகள் சாத்தியம் என்றாலும், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இதை ஏற்றுகொள்வதில் இன்னமும் சிக்கல்கள் இருக்கின்றன.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், எத்தனை இடங்களில் தேர்தல் முகவரை நியமித்து அவற்றை முறையாக கண்காணிக்க முடியும்? அவற்றில் இருக்கும் நம்பகதன்மை என்ன..? போன்ற பல கேள்விகளுக்கு சரியான பதில்  கிடைத்தால் மட்டுமே, இந்த சிக்கல்களை முழுமையாக களைய முடியும்.

வசந்தி , கட்டுரையாளர் – நியூஸ்7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.