“நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும் வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும் வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!

நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும் வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.