விற்பனையாகாத வெள்ளைப் பூசணிகள்: சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தில் விற்பனையாகாத சுமார் 3 டன் அளவிலான வெள்ளை பூசணிக்காயை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர். பொதுவாக வெள்ளைப் பூசணி கோவில்…

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தில் விற்பனையாகாத சுமார் 3 டன் அளவிலான வெள்ளை பூசணிக்காயை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர்.

பொதுவாக வெள்ளைப் பூசணி கோவில் பூஜைகள் மற்றும் திருஷ்டி கழிப்பது
உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பர்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள நாடாய் கொட்டாய் கிராமத்தில் தற்போது வெள்ளைப் பூசணிகள் விற்பனையாகாமல் இருப்பதால் விவசாயிகள் பெரிதும்
கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வியாபாரிகள் வெள்ளைப் பூசணியை வாங்க முன்வராததால் சுமார் 3 டன் வெள்ளைப் பூசணிகளை சாலையோரம் விவசாயிகள் கொட்டிச் சென்றுள்ளனர். இதனால், இப்பகுதியில் வெள்ளைப் பூசணி அழுகி, துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த வெள்ளைப் பூசணிகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.